குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - தனுசு

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - தனுசு

வேற்றுமையின்றி பழகும் குணம் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களின் வாழ்வில் சில தடைகளை நீக்கிக் கொள்ள வாய்ப்பாகவும், சிலருக்கு பல ஆண்டு முயற்சி செய்த வெளிநாடு செல்ல வேண்டுமென்று சூழ்நிலைகளும் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும்.
 
கணவன் - மனைவி வேற்றுமைகளில் நல்ல சூழ்நிலை அமையும். எதிர்கால நன்மைகளுக்காக பல நன்மைகளை சந்தித்து புதிய தொழிலிலும், வேறு வேலை தேடியும் சென்று வந்து, கடைசியில் நல்ல வேலை கிடைக்க பெறுவீர்கள். அரசியலில் சிலருக்கு நல்ல ஆலோசகராக இருந்து வழி நடத்தும் வாய்ப்புகள் அமையும். 
 
முக்கியமான தொழில் நுட்ப பயிற்சி பயின்று அதன் மூலம் முன்னேற்றம் காண சந்தர்ப்பம் அமையும். உறுதியுடன் எந்த செயலையும் செய்து வருவீர்கள். உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பெரிய தொழில் அதிபர்களின் பழக்கம் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை பெற்றுத் தரும். காரியத்தில் நல்ல அனுகூலம் உண்டாகும்.
 
தடைபட்டு நின்றிருந்த காரியம் செயல்படதுவங்கும். கலைத்துறையினர் ஆர்வத்தின் மூலம் பல இடங்களில் பலரை சந்தித்து மேன்மை பெறுவீர்கள். இதன் மூலம் நல்ல அனுபவமும் தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி மேன்மை உண்டாகும்.
 
தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். குடும்ப சுமைகள் குறைந்து தேவைகள் நிறைவேறும். ஆசிரியர் பணியில் சிலருக்கு இடைஞ்சல்கள் மறையும். இனி திறமையுடன் சுதந்திரமாக செயல்படும் சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நிலையில் சீரான அமைப்பு கிடைக்கும்.
 
பரிகாரம்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து வழிபட்டு உங்களின் கோரிக்கையை சொல்லிவர அனைத்து காரியமும் சிக்கீரம் நடக்கும்.